நாளுக்கு நாள் குழந்தைகளின் மீதான #பாலியல் வன்கொடுமைகள் பள்ளி #கல்லூரி என எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகின்றன.#பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான நெருக்கம் தற்போது குறைந்து வருகிறது.
மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மிருகங்கள் ஆகிவருகின்றனர்.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இந்த பாதிப்புகள் இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாக நடக்கிறது.சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் மாற்றங்கள் வந்தபாடில்லை.
அரசை சட்டதிட்டங்களை பிறரை குறைகூறுவதை விட நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது.குழந்தந்தைகள் மீது #கவனம் செலுத்துவது என்பதுதான் மிக முக்கியம்.
முதலில் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள் அது உங்களுக்கும் மனநலத்தை பேணும், குழந்தைகளுக்கும் நல்லது.
பாலியல் #வன்கொடுமையால் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண்குழந்தைகளுக்கும் நடந்துகொண்டுதான் உள்ளது.
எனவே ஆண் மற்றும் பெண்குழந்தைகளுக்கு சரியான தொடுதல் கெட்ட தொடுதல்களை பற்றிய விழிப்புணர்வுகளை சொல்லி கொடுங்கள்.
குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகளில் வித்தியாசத்தை உணர்ந்தால் அல்லது காரணமற்ற பயம் தனிமையை கண்டால் கவனியுங்கள்.
ஒவ்வொரு நாலும் பள்ளிக்கு சென்று வந்ததும் நடந்த விஷயங்களை #கேளுங்கள்.இதனால் மாற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.அதுமட்டுமல்லாது உங்கள் அக்கறை குழந்தைகளுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.எதையும் உங்களிடம் பகிரும் பழக்கம் ஏற்படும்.
இதுபோன்ற தவறுகளுக்கு குழந்தைகள் பொறுப்பில்லை எனவே குழந்தைகளை திட்டவோ அடிக்கவோ கூடாது.
#தற்காட்பு கலைகளை கற்றுக்கொடுக்க வாய்ப்பு உள்ளவர்கள் கற்றுக்கொடுங்கள்.
பெரும்பாலும் தெரிந்தவர்களாலேயே பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகிறது.
எப்போதும் உங்கள் குழந்தைகளை உங்கள் #கண்காணிப்பிலேயே வைத்திருங்கள்.
குழந்தைகள் முன் தவறாக பேசவோ தவறாக நடந்துகொள்ளவோ கூடாது.
இதுபோன்ற #வன்கொடுமையை சந்திக்கும் குழந்தை பயம் படிப்பில் கவனமின்மை தூக்கமின்மை போன்ற பாதிப்புள்ளாகலாம் எனவே முறையான மனநல ஆலோசனைகள் பெற வேண்டும்.
இன்றைய சூழலில் தாய் தந்தையை தவிர பாதுகாப்பான உறவுகள் சந்தேகம் தான்.எவ்வளவு அறிமுகமானவராக இருந்தாலும் உறவினராக இருந்தாலும் கவனமா இருப்பது நல்லது.நமக்கு அவர்கள் குழந்தைகள் காம வெறியர்களுக்கு அப்படியல்ல.
குழந்தைகள் வளர்ப்பு பற்றிய வீடியோக்களை பாருங்கள் நல்ல புத்தகங்களை படியுங்கள்.முதலில் நமக்கு விழிப்புணர்வு இருந்தால்தான் குழந்தைகளை பாதுகாக்க முடியும்.
நல்ல பதிவுகளை பகிர்வோம்...! நலமுடன் வாழ்வோம் ..!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக