செவ்வாய், 23 நவம்பர், 2021

 நாளுக்கு நாள் குழந்தைகளின் மீதான #பாலியல் வன்கொடுமைகள் பள்ளி #கல்லூரி என எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகின்றன.#பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான நெருக்கம் தற்போது குறைந்து வருகிறது.

மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மிருகங்கள் ஆகிவருகின்றனர்.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இந்த பாதிப்புகள் இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாக நடக்கிறது.சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் மாற்றங்கள் வந்தபாடில்லை.
அரசை சட்டதிட்டங்களை பிறரை குறைகூறுவதை விட நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது.குழந்தந்தைகள் மீது #கவனம் செலுத்துவது என்பதுதான் மிக முக்கியம்.
முதலில் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள் அது உங்களுக்கும் மனநலத்தை பேணும், குழந்தைகளுக்கும் நல்லது.
பாலியல் #வன்கொடுமையால் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண்குழந்தைகளுக்கும் நடந்துகொண்டுதான் உள்ளது.
எனவே ஆண் மற்றும் பெண்குழந்தைகளுக்கு சரியான தொடுதல் கெட்ட தொடுதல்களை பற்றிய விழிப்புணர்வுகளை சொல்லி கொடுங்கள்.
குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகளில் வித்தியாசத்தை உணர்ந்தால் அல்லது காரணமற்ற பயம் தனிமையை கண்டால் கவனியுங்கள்.
ஒவ்வொரு நாலும் பள்ளிக்கு சென்று வந்ததும் நடந்த விஷயங்களை #கேளுங்கள்.இதனால் மாற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.அதுமட்டுமல்லாது உங்கள் அக்கறை குழந்தைகளுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.எதையும் உங்களிடம் பகிரும் பழக்கம் ஏற்படும்.
இதுபோன்ற தவறுகளுக்கு குழந்தைகள் பொறுப்பில்லை எனவே குழந்தைகளை திட்டவோ அடிக்கவோ கூடாது.
#தற்காட்பு கலைகளை கற்றுக்கொடுக்க வாய்ப்பு உள்ளவர்கள் கற்றுக்கொடுங்கள்.
பெரும்பாலும் தெரிந்தவர்களாலேயே பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகிறது.
எப்போதும் உங்கள் குழந்தைகளை உங்கள் #கண்காணிப்பிலேயே வைத்திருங்கள்.
குழந்தைகள் முன் தவறாக பேசவோ தவறாக நடந்துகொள்ளவோ கூடாது.
இதுபோன்ற #வன்கொடுமையை சந்திக்கும் குழந்தை பயம் படிப்பில் கவனமின்மை தூக்கமின்மை போன்ற பாதிப்புள்ளாகலாம் எனவே முறையான மனநல ஆலோசனைகள் பெற வேண்டும்.
இன்றைய சூழலில் தாய் தந்தையை தவிர பாதுகாப்பான உறவுகள் சந்தேகம் தான்.எவ்வளவு அறிமுகமானவராக இருந்தாலும் உறவினராக இருந்தாலும் கவனமா இருப்பது நல்லது.நமக்கு அவர்கள் குழந்தைகள் காம வெறியர்களுக்கு அப்படியல்ல.
குழந்தைகள் வளர்ப்பு பற்றிய வீடியோக்களை பாருங்கள் நல்ல புத்தகங்களை படியுங்கள்.முதலில் நமக்கு விழிப்புணர்வு இருந்தால்தான் குழந்தைகளை பாதுகாக்க முடியும்.
நல்ல பதிவுகளை பகிர்வோம்...! நலமுடன் வாழ்வோம் ..!
May be a cartoon of text that says 'குழந்தைகள் மீதான Stop பாலியல் வன்கொடுமை ChiLd abuse'
1 Share
Like
Comment
Share

 Hallucinations - #மாயத்தோற்றம்

உருவங்கள் தெரிவது யாரோ பின் தொடர்வது போன்ற உணர்வு இறந்த போன உறவினர் அல்லது நண்பர்கள் தெரிவது வந்து கூப்பிடுகிறார் என்று யாராவது கூறினால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் அவர்களுக்கு அது உண்மை தான்.. இது மட்டுமல்ல இன்னும் இருக்கிறது இந்த ( Hallucinations) மாயத் தோற்ற பிரச்சனை...


😱 மாயத் தோற்றங்கள் கேட்க விளையாட்டு போல இருந்தாலும் சில நேரங்களில் #தற்கொலைக்கு கூட தூண்டுதலாக அமையும்.
😱 3 என்ற தனுஷ் படத்தில் வரும் பிரச்சனை தான் இது அவர்களுக்கு அது மிக கொடூரமான பிரச்சனை.
😱 தன்னை யாரோ கட்டுப்படுத்தி இயக்குவது போன்ற உணர்வு
😱 சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதிக்கு மட்டுமே தெரியும் பெண் போலத்தான். இந்த பாதிப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் தெரியும்.
😱 குடிப் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்சனை வரும்.
😱 உருவங்கள் மட்டுமின்றி #சத்தம் கேட்பது, இறந்த போனவர் கூப்பிடுவது பேசுவது வாசனை வருவது போன்றவையும் இதன் பாதிப்பே.
😱 முறையான ஆலோசனை பெறாமல் தவறான முடிவெடுத்தவர்கள் ஏராளம்.
😱 அதிக அளவில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் ஆண்களுக்கும் வரும் . எந்த வயதினருக்கும் வரும்.
உங்கள் அன்புக்குரியவர்களோடு மனம் விட்டு பேசுங்கள் உங்கள் பிரச்சனையை நம்பிக்கையான யாரிடமாவது கூறுங்கள்.. அல்லது எங்களைப் போன்ற #ஆலோசகர்கடம் பேசுங்கள்..

முறையான ஆலோசனையும் ஹிப்னாட்டிஸ சிகிச்சையும் நல்ல தீர்வை தரும்.

எல்லோரும் அறிந்துகொள்ள
#manosakthi
#hypnotherapy_Madurai
#hypnosis_Chennai
#ஹிப்னாட்டிச ஆழ்மன கிகிச்சை


புதன், 4 நவம்பர், 2020

ஆழ்மன சிகிச்சை அற்புதங்கள்

 

இப்படியும் மனிதர்களின் மனநிலை இருக்குமா என்று தான் தோன்றும் ராம்குமார் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பிரச்சனை.

ராம்குமார் தொழிலதிபர் நல்ல திறமையான மனிதர் 45 வயதான இவருக்கு செய்தியோ  அல்லது செய்தித்தா
ளிலோ வருவதை தன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி பார்க்கும் குணமுள்ளவர் அது தான் அவர் பிரச்சனையும்.

தவறான வழியில் சென்ற மனைவி கண்டுபிடித்த கணவன் இப்படி ஒரு செய்தியை கண்டால் உடனே அவருக்கு தனது மனைவியும் ஏதாவது அப்படி செய்வாளே என்று கைபேசியை ஆராய்ந்து பார்ப்பது, சண்டையிடுவது வழக்கம். ஆனால் அவரது மனைவி மிகவும் கண்ணியமானவர் என்பதை நம்பினால் இந்த குணம் ஆட்டிப்படைக்கிறது.

நல்ல பெண்ணைப் போய் சந்தேகித்துவிட்டோமே என்ற குற்றவுணர்வு வேறு.

குழந்தைகள் செய்த தவறு பற்றி செய்தி கேள்விப்பட்ட உடனே குழந்தைகளை ஆராய்வது என்று நண்பர்கள் உறவினர்கள் தாய் தந்தை என எல்லோர் மேலும் சந்தேகம் அதனால் குற்றவுணர்வு தனிமையில் அழுவது. இதனால் தூக்கமிழந்து தானே பேசும் நிலை வந்துவிட்டது. இதனால் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் அதுவும் மன அழுத்தம் கோபம் என்று வாட்டி வதைத்த நிலையில் 4 ஆண்டுகள் #மாத்திரை உதவியால் வாழ்ந்து வந்த அவருக்கு

#ஹிப்னாட்டிச ஆழ்மன சிகிச்சையால் முழுமையான தீர்வு வழங்கப்பட்டது. மருந்தை கைவிட்டு மகிழ்ச்சியோடு வாழ்கிறார். தொழிலிலும் நல்ல நிலையை அடைந்து வருகிறார்.

தவறான மனிதர்களைக் கூட நம்பினால் மாற வாய்ப்புள்ளது அதே போல் நல்லவர்கள் கூட செய்யாவிட்டாலும் கெட்ட பெயர் தான் அதற்கு செய்தால் தான் என்னவென்று செய்தவர்கள் தான் அதிகம்.. உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசுங்கள். நம்புங்கள் வாழ்க்கை சிறக்கும்.

#ஹிப்னாட்டிஸ்ட் & #மனநல_ஆலோசகர்
#மணித்தமிழன்

வியாழன், 8 அக்டோபர், 2020

ஹிப்னாட்டிசம் மெஸ்மரிச வழியில் ஆழ்மன சிகிச்சை

 

 

 

ஹிப்னாட்டிச ( Hypnotherapy) சிகிச்சை முறையில் மனநல பிரச்சனைகள்  மருந்துகளின்றி சரி செய்யப்படுவதால். மருந்துகளால் ஏற்படும் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ( No Side effects ) வராது. எனவே இது ஒரு பாதுகாப்பான சிகிச்சை முறை .

 

ஹிப்னாட்டிசம் ( Hypnotism) பற்றி படங்களில் தவறான சித்தரிப்பை பார்த்து மக்களுக்கு பயம் . ஆனால் யாருடைய #விருப்பத்திற்கு மாறாகவும் ஹிப்னாடிசம் செய்ய முடியாது. அற்புதமான பாதுகாப்பான சிகிச்சை முறையே. தவறாக பயன்படுத்த முடியாது. வசியம் செய்ய முடியாது.

இது ஆழ்மனதை (Subconscious mind) தொடர்பு கொள்ளும் ஒரு முறை அவ்வளவு தான்.

மனநலமே முழுமையான ஆரோக்கியம். 70% பிரச்சனைகள் ஏற்படுவதற்கு மனம் தான் முக்கிய காரணம்.

நேற்றைய மனநல பிரச்சனைகளே இன்றைய உடல்நிலை நோய்களுக்கு காரணம்.

உடல் பிரச்சனைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மனதிற்கும் கொடுத்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.

#ஆழ்மன_சிகிச்சை

#ஹிப்னாட்டிசம்

#Hypnosis

#Hypnotherapy

#mesmerizam

#மெஸ்மரிசம்

www.facebook.com/tamilhyno